பரிஸ் : Vinyl கடையில் தீ... இறுதி நிமிடத்தில் காப்பாற்றப்பட்ட உயிர்கள்!!

13 பங்குனி 2025 வியாழன் 17:13 | பார்வைகள் : 3331
பரிஸ் 11 ஆம் வட்டாரத்தில் உள்ள Vinyl கடையில் பாரிய தீ விபத்து ஏற்பட்டது. ஊழியர்கள் இறுதி நிமிடத்தில் வெளியேற்றப்பட்டதை அடுத்து, பெரும் உயிர்ச்சேதம் தடுக்கப்பட்டது.
இன்று வியாழக்கிழமை பிற்பகல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. Le Silence de la rue வீதியில் அமைந்துள்ள Vinyl கடையின் சேமிப்பகம் அருகில் உள்ள Rue Faidherbe வீதியில் அமைந்துள்ளது. அதில் இன்று பிற்பகல் 2.30 மணி அளவில் திடீரென அங்கு தீ பரவியுள்ளது.
அங்கிருந்த ஊழியர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். கடையின் மேலாளருக்கு சிறிய தீக்காயங்கள் ஏற்பட்டது.
பல இலட்சம் யூரோக்கள் மதிப்புள்ள பொருட்கள் தீக்கிரையானதாக தெரிவிக்கப்படுகிறது.