Paristamil Navigation Paristamil advert login

இந்த ஆண்டும் ரூ.1.05 லட்சம் கோடி கடன்; 10 லட்சம் கோடியை நெருங்கும் மொத்த கடன்

இந்த ஆண்டும் ரூ.1.05 லட்சம் கோடி கடன்; 10 லட்சம் கோடியை நெருங்கும் மொத்த கடன்

15 பங்குனி 2025 சனி 08:46 | பார்வைகள் : 218


தமிழக பட்ஜெட்டில் வருவாய் பற்றாக்குறை 41,637 கோடி ரூபாயாகவும், மொத்த கடன் 9.30 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டும் 1.05 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்க அரசு முடிவு செய்துள்ளது.

 வருவாய் வரவினங்கள்


 மாநில அரசின் சொந்த வரி வருவாய் ரூ.2,20,894.58 கோடி

 வரி அல்லாத வருவாய் ரூ.28,818.58 கோடி

 மத்திய வரியில் பங்கு ரூ.58,021.50 கோடி

 மத்திய அரசு மானியம் ரூ.23,834.11 கோடி

 மொத்த வருவாய் ரூ.3,31,568.76 கோடி

வருவாய் செலவினங்கள்


 ஊதிய செலவினம் ரூ.90,463.98 கோடி

 சம்பளம் அல்லாத செயல்பாடுகள் மற்றும் பராமரிப்பு செலவினம் ரூ.16,921.78 கோடி

 ஓய்வூதியம் மற்றும் ஏனைய ஓய்வூ கால பயன் ரூ.41,290.40 கோடி

மானியங்கள் மற்றும் நிதி மாற்றங்களுக்கான செலவினம் ரூ.1,53,723.87 கோடி

 கடனுக்கு செலுத்த வேண்டிய வட்டி ரூ.70,753.99 கோடி

 மொத்த வருவாய் செலவினங்கள் ரூ.3,73,203.69 கோடி

 வருவாய் பற்றாக்குறை ரூ.42,000 கோடி

வருவாய் பற்றாக்குறை, 41,634.93 கோடி ரூபாயாக இருக்கும். வரி வசூலை மேம்படுத்துதல், வரி விகிதங்களை சீரமைத்தல் உள்ளிட்ட வருவாய் பெருக்கும் நடவடிக்கைகளை எடுப்பதால், 2026 - 27ம் ஆண்டில் வருவாய் பற்றாக்குறை 31,282.23 கோடி ரூபாயாக குறையும். மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் நிதிப் பற்றாக்குறை விகிதம், 3 சதவீதம்.

மொத்த கடன் ரூ.9 லட்சத்து 30,000 கோடி


தமிழக அரசு 2025 - 26ம் ஆண்டில், 1 லட்சத்து 62,096.76 கோடி ரூபாய் கடன் பெற திட்டமிட்டுள்ளது. மேலும், 55,844.53 கோடி ரூபாய் பொதுக் கடனை அரசு திருப்பிச் செலுத்தும்.

இதன் விளைவாக, 2026 மார்ச் 31 அன்று நிலுவையில் உள்ள கடன், 9 லட்சத்து 29,959.30 கோடி ரூபாயாக இருக்கும்.

தற்போது நிலவும் பொருளாதார சூழலில், தமிழகத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம், தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட அதிகமாக உள்ளது. இது நமக்கு சாதகமானதாகும்.

நம் உயர் வளர்ச்சி வீதம், வரும் காலங்களிலும் தொடரும். நிதி ஆதாரங்களை பெருக்கியும், வரி வசூல் திறனை அதிகரித்தும், மாநிலத்தின் மொத்த வருவாயின் உயர் வளர்ச்சி வீதம் தக்கவைக்கப்படும்.
 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்