வெளிநாட்டு குற்றவாளிகளுக்கு அவர்களது நாடுகளிலேயே சிறை!!
.jpg)
15 பங்குனி 2025 சனி 13:00 | பார்வைகள் : 609
குற்றச் செயல்களில் ஈடுபடும் வெளிநாடுகளைச் சேவிக்கர்ந்த குற்றவாளிகளுக்கு அவர்களது நாட்டுச் சிறைகளிலேயே அடைக்கவேண்டும் என நீதித்துறை அமைச்சர் Gérald Darmanin தெரிவித்துள்ளார்.
பிரான்சில் சிறைச்சாலையின் பற்றாக்குறை அறியப்பட்டதே. 61,000 பேருக்கான சிறைச்சாலையில் 81,000 பேர் சிறைவைக்கப்பட்டுள்ளனர். கைதிகளின் எண்ணிக்கையில் 25% சதவீதமானவர்கள் வெளிநாட்டவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், வெளிநாடுகளைச் சேர்ந்த குற்றவாளிகளை அவர்களது நாட்டுச் சிறைகளிலேயே வைத்து பராமரிக்கும் திட்டம் ஒன்றை Gérald Darmanin முன்மொழித்துள்ளார்.
'நான் கடந்தவாரம் மொராக்கோ சென்றிருந்த போது, இது தொடர்பில் மொராக்கோ ஜனாதிபதியுடன் இது தொடர்பில் கலந்துரையாடியிருந்தேன். மேலும், பிரெஞ்சு கைதிகள் வெளிநாடுகளில் சிறைவைக்கப்பட்டுள்ளதாக எந்த தகவலும் இல்லை' எனவும் தெரிவித்தார்.