அஸ்வத் மாரிமுத்துவின் நெகிழ்ச்சி பதிவு..!

15 பங்குனி 2025 சனி 12:01 | பார்வைகள் : 790
இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவான ’டிராகன்’ திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்தது என்பது தெரிந்தது.
இந்த நிலையில், இந்த படத்தில் கே. எஸ். ரவிக்குமார், மிஷ்கின், கௌதம் மேனன், மற்றும் பிரதீப் ரங்கநாதன் என நான்கு தலைமுறை இயக்குனர்களை நடிகர்களாக நடிக்க வைத்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியான மற்றும் மறக்க முடியாத தருணமாக இருந்தது என்று அவர் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.
மேலும், கே. எஸ். ரவிக்குமார், மிஷ்கின், கௌதம் மேனன், மற்றும் பிரதீப் ரங்கநாதன் ஆகியோர்களுடன் எடுத்த புகைப்படத்தையும் அவர் பதிவிட்டுள்ளதால், இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த பதிவில் அவர் கூறியதாவது:
நினைவில் கொள்ள வேண்டிய தருணம்! நடிகர்களாக மாறிய வெவ்வேறு தலைமுறையைச் சேர்ந்த நான்கு இயக்குனர்களை வைத்து ஒரு படம் இயக்கியது மிகவும் அழகான விஷயம் என்று பதிவு செய்துள்ளார்.
இந்த நிலையில், ’டிராகன்’ வெற்றிக்கு பிறகு, சிம்பு நடிக்கும் 51-வது திரைப்படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்கவுள்ளார். இந்த படத்தையும் ’டிராகன்’ படத்தை தயாரித்த ஏ.ஜி.எஸ் நிறுவனம் தான் தயாரிக்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.