'தெளிவான பதில் தேவை' - ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்கும் பிரான்ஸ்!!

15 பங்குனி 2025 சனி 19:22 | பார்வைகள் : 1445
அமைதி பேச்சுவார்த்தைக்கு எந்த ஒரு முன்னெடுப்பும் இல்லாமல், பதிலளிக்காமல் ரஷ்யா இருக்கிறது என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் கடுமையாக சாடியுள்ளார்.
சமாதானம் ஒன்றை ஏற்படுத்துவதற்கு யுக்ரேன் தரப்பிலும், ஐரோப்பிய நாடுகளும், தற்போது அமெரிக்காவும் என ஒன்றிணைந்து போராடி வரும் நிலையில், ரஷ்யா கள்ள மெளனம் சாதித்து வருகிறது என சாடிய மக்ரோன், "ரஷ்யா உண்மையிலேயே அமைதியை விரும்புகிறது என்ற தோற்றத்தை ஏற்படுத்துவதில்லை." எனவும் விமர்சித்தார்.
"மிக தெளிவான ஒரு பதில் வேண்டும்" எனவும் ரஷ்யாவிடம் ஜனாதிபதி மக்ரோன் வலியுறுத்தினார்.