காணாமல் போன சிறுவன் Yero : எட்டு நாட்களின் பின்னர் மீட்பு!!

15 பங்குனி 2025 சனி 19:37 | பார்வைகள் : 2092
காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டு கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக தேடப்பட்டு வந்த Yero எனும் சிறுவன் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளான்.
Villejuif நகரில் வசிக்கும் குறித்த 15 வயதுடைய சிறுவன் கடந்த மார்ச் 7 ஆம் திகதி அன்று காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. காவல்துறையினரும், சிறுவனின் குடும்பத்தினரும் சிறுவன் தொடர்பில் தகவல் தெரிவித்தால் தொடர்புகொள்ளுமாறு அறிவித்திருந்தனர்.
இந்நிலையில், எட்டு நாட்களின் பின்னர், இன்று மார்ச் 15 ஆம் திகதி நண்பகல் சிறுவன் Pau நகரில் வைத்து அடையாளம் காணப்பட்டு மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 750 கி. மீ தொலைவுக்கு சிறுவன் பயணித்திருந்தது எப்படி என்பது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.