இஸ்ரேலின் தாக்குதலில் இரண்டு கைகளையும் இழந்த சிறுவனின் புகைப்படம்

17 சித்திரை 2025 வியாழன் 16:33 | பார்வைகள் : 4841
காசா யுத்தத்தில் சிக்கி இரண்டு கைகளையும் இழந்த பாலஸ்தீன சிறுவனின் புகைப்படம் 2025ம் ஆண்டின் சிறந்த உலக பத்திரிகை புகைப்படமாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.
பாலஸ்தீன புகைப்படக்கலைஞர் சமர் அபு எலுவ் நியுயோர்க் டைம்சிற்காக எடுத்த புகைப்படத்திற்கே இந்த விருது கிடைத்துள்ளது.
இந்த புகைப்படம் 2024 மார்ச் மாதம் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல் காரணமாக தனது இரண்டு கைகளையும் இழந்த ஒன்பது வயது சிறுவனின் துயரத்தை வெளிப்படுத்துகின்றது.
2023 இல் காசாவிலிருந்து வெளியேறிய பெண் புகைப்படக்கலைஞரான சமர் அபு எலுவ் டோஹாவில் இந்த சிறுவன் வசிக்கும் தொடர்மாடியிலேயே தற்போது வசித்து வருகின்றார்.
இஸ்ரேலின் தாக்குதலால் காயங்களிற்குள்ளான பல பாலஸ்தீனியர்களின் புகைப்படங்களை சமர் அபு எலுவ் பதிவு செய்துள்ளார்.
இது அமைதியான ஆனால் உரத்த குரலில் பேசும் புகைப்படம் எனஉலக பத்திரிகை புகைப்பட அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்த புகைப்படம் ஒரு சிறுவனின் கதையை சொல்லும் அதேவேளை பலதலைமுறைகளின் மீது தாக்கம் செலுத்தப்போகும் பரந்துபட்ட யுத்தம் குறித்தும் பேசுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
2