பரிசில் இடம்பெற்ற மாநாடு.. ”பலனளித்தது”!!

18 சித்திரை 2025 வெள்ளி 07:00 | பார்வைகள் : 971
யுக்ரேனுக்கு ஆதரவாக நேற்று ஏப்ரல் 17, பரிசில் மாநாடு ஒன்று இடம்பெற்றது. பிரான்ஸ், பிரித்தானியா, அமெரிக்கா, ஜேர்மன் மற்றும் யுக்ரேனிய தலைவர்கள் இதில் பங்கேற்றனர். இந்த மாநாடு மிகவும், “சிறப்பாகவும், பலனளிக்கும் விதமாகவும்” அமைந்திருந்தது.
எலிசே மாளிகையில் இடம்பெற்ற இந்த மாநாட்டின் போது, யுக்ரேனுக்கு உதவுவது எனும் ஒரே புள்ளியில் இணைந்ததாகவும், இது மிகவும் பலனளித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. “யுக்ரேனில் நிரந்தர அமைதி” எனும் ஓர் இலக்கை நோக்கி ஐரோப்பா தொடருந்து பயணிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பரிஸ் மாநாட்டை அடுத்து மிக விரைவில் லண்டனில் மற்றுமொரு மாநாடு இடம்பெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.