நகரசபை காவல்துறையினருக்கு இலவச போக்குவரத்து!!
.jpg)
18 சித்திரை 2025 வெள்ளி 08:00 | பார்வைகள் : 586
இல் து பிரான்சுக்குள் பணிபுரியும் நகரசபை காவல்துறையினர் (policiers municipaux) மெற்றோ மற்றும் ட்ராம்களை இலவசமாக பயன்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான ஒப்பந்தம் ஒன்றை பரிஸ் காவல்துறையினர் RATP நிறுவனத்துடன் நேற்று ஏப்ரல் 17, வியாழக்கிழமை கைச்சாத்திட்டது. முதல்கட்டமாக 10 நகரங்களைச் சேர்ந்த காவல்துறையினருக்கு இந்த வசதி ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளது.
Hauts-de-Seine :
Châtillon மற்றும் Bourg-la-Reine
Yvelines “
Saint-Germain-en-Laye
Val-de-Marne :
Rungi
Essonne :
Palaiseau
Seine-Saint-Denis :
Les Pavillons-sous-Bois
Val d'Oise :
Sannois
Seine-et-Marne :
Montereau-Fault-Yonne
போன்ற நகரங்கள் இந்த ஒப்பந்தத்தில் உள்ளன.