Paristamil Navigation Paristamil advert login

Créteil : மகிழுந்தில் இருந்து தள்ளி விழுத்தப்பட்ட பெண்! - ஒருவர் கைது!!!

Créteil : மகிழுந்தில் இருந்து தள்ளி விழுத்தப்பட்ட பெண்! - ஒருவர் கைது!!!

20 சித்திரை 2025 ஞாயிறு 10:36 | பார்வைகள் : 4756


வீதியில் பயணித்துக்கொண்டிருந்த மகிழுந்து ஒன்றில் இருந்து பெண் ஒருவர் தள்ளி விழுத்தப்பட்ட சம்பவம் Créteil நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏப்ரல் 19, நேற்று சனிக்கிழமை முற்பகல் 11.10 மணி அளவில் பாதசாரி ஒருவர் அவசர இலக்கத்துக்கு தொடர்புகொண்டு தகவல் தெரிவித்ததை அடுத்து சம்பவ இடத்துக்கு காவல்துறையினர் விரைந்து சென்றனர். Créteil-Soleil வணிக வளாகத்துக்கு அருகே Rue Claude-Debussy வீதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. மகிழுந்து ஒன்று வீதியில் பயணித்த நிலையில் திடீரென அதில் இருந்து பெண் ஒருவர் தள்ளிவிடப்பட்டார்.

கீழே விழுந்த அப்பெண் படுகாயமடைந்த நிலையில், Henri-Mondor மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரை தள்ளிவிட்டவர் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடிய நிலையில், சில நிமிடங்களில் அவர் Taverny (Val-d'Oise)ம் நகரில் உள்ள வீடொன்றில் வைத்து கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்டவர் அப்பெண்ணின் முன்னாள் கணவர் என தெரிவிக்கப்படுகிறது.




 

6 நாள்கள் முன்னர்

நினைவஞ்சலி

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்