தொடர் மழை.. மூன்று மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை!!

21 சித்திரை 2025 திங்கள் 07:00 | பார்வைகள் : 312
பிரான்சின் மேற்கு மாவட்டங்களில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக பல பகுதிகள் வெள்ளத்தில் சிக்கியுள்ளன. மார்ச் 21, இன்று திங்கட்கிழமை மூன்று மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Corrèze, Gironde மற்றும் Dordogne ஆகிய மூன்று மேற்கு மாவட்டங்களுக்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அங்கு கடந்த சனிக்கிழமை முதல் தொடர்ச்சியாக மழை கொட்டித்தீர்த்து வருகிறது.
பல்வேறு வீதிகளை வெள்ளம் மூடியுள்ளதால் அங்கு போக்குவரத்து தடைகளும் ஏற்பட்டுள்ளன.
அதேவேளை, வடகிழக்கு மாவட்டங்கள் மற்றும் தென்கிழக்கு மாவட்டங்கள் சிலவற்றுக்கும் வெள்ளம் காரணமாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அங்கு குறைந்தபட்ச 'மஞ்சள்' நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.