இல்-து-பிரான்ஸ் வீதிகளில் பலத்த நெருக்கடி..! - சிவப்பு எச்சரிக்கை!!

21 சித்திரை 2025 திங்கள் 06:39 | பார்வைகள் : 538
ஈஸ்ட்டர் விடுமுறை முடிவுக்கு வந்ததை அடுத்து, உள்வரும் வீதிகளில் (retours) பலத்த போக்குவரத்து நெரிசல் பதிவாகும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இல் து பிரான்ஸ் மாகாணம் முழுவதற்கும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. A25, A10, A13, A11, A7, A71 என அனைத்துவிதமான நெடுஞ்சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் பதிவாகும் எனவும்,
குறிப்பாக Mont Blanc சுரங்கப்பாதை இன்று நண்பகல் 12 மணியில் இருந்து இரவு 11 மணிவரை பலத்த நெரிசலுக்கு உள்ளாகும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக வடமேற்கு பிராந்தியம் முழுவதும் (புகைப்பட்டத்தில் காண்க) சிவப்பு எச்சரிக்கையும் ஏனைய அனைத்து பகுதிகளுக்கும் செம்மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.