பரிசுத்த போப்பாண்டவர் மறைந்தார்... இருளில் மூழ்கிறது ஈஃபிள்!!

21 சித்திரை 2025 திங்கள் 09:54 | பார்வைகள் : 4785
பரிசுத்த போப்பாண்டவர் தனது 88 ஆவது வயதில் இன்று ஏப்ரல் 21, திங்கட்கிழமை காலமானார். அவரது மறைவை அடுத்து ஈஃபிள் கோபுரம் இருளில் மூழ்க உள்ளது.
பரிஸ் நகர முதல்வர் ஆன் இதால்கோ இதனை சற்று முன்னர் அறிவித்தார்.
“போப்பாண்டவரின் மரணத்தை அறிந்த பிறந்து மனம் ஆழந்த உணர்ச்சியை எதிர்கொண்டுள்ளது. அவர் ஒற்றுமை அமைதி மற்றும் மனிதநேயம் ஆகியவற்றின் உலகளாவிய அடையாளமாகும். மிகவும் பாதிக்கப்பட்டவர்களை சென்றடையும் திருசபைக்கான அவரது அர்ப்பணிப்பு, மனித கண்ணியத்துக்கான அவரது போராட்டம்.. குறிப்பாக எதுவும் இல்லாதவர்களுக்காக அவர் தனது காலம் முழுவதும் செலவிட்டார்.” என தனது இரங்கல் குறிப்பில் ஆன் இதால்கோ குறிப்பிட்டார்.
முன்னதாக 2006 ஆம் ஆண்டில் போப்பாண்டவர் ஜோன் இரண்டாம் போல் அவர்கள் இறந்தபோது அவருடைய பெயரை பரிஸின் வீதி ஒன்றுக்கு சூட்டியது போல், பிரான்சுவா அவர்களின் பெயரும் சூட்டப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1