போப்பாண்டவர் மரணம் : 88 தடவைகள் ஒலிக்கும் நோர்து-டேம் தேவாலய காண்டாமணி!!

21 சித்திரை 2025 திங்கள் 10:09 | பார்வைகள் : 742
பரிசுத்த போப்பாண்டவர் தனது 88 ஆவது வயதில் இன்று மரணமடைந்ததை அடுத்து, அவருக்கான இரண்டு அஞ்சலி பிரார்த்தனை நோர்து-டேம் தேவாலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
முதலாவது பிரார்த்தனை நண்பகல் 12 மணிக்கும் இரண்டாவது பிரார்த்தனை மாலை 6 மணிக்கும் இடம்பெற உள்ளது. “போப்பாண்டவரின் 88 வருட வாழ்க்கையை பிரதிபலிக்கும்” விதத்தில் 88 தடவைகள் காண்டாமணிகள் ஒலிக்கவிடப்பட உள்ளன. நோர்து-டேம் தேவாலயத்தில் இருக்கும் உலகப்பிரசித்தி பெற்ற காண்டாமணிகள் இன்று ஒலிக்கின்றன. 88 தடவைகள் மணி ஒலிக்க 23 நிமிடங்கள் எடுக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
”ஈஸ்ட்டர் வாரத்தில் அவரது மறைவு தெரிவிக்கும் செய்தி மிகவும் ஆச்சரியமானது. அவது மறைவு ஆர்த்மாத்தமானது. அவரது அர்ப்பணிப்பின் பலன் தான் ஈஸ்ட்டர் விடுமுறையில் அவரது மறைவு ஏற்படக்காரணம் என்பதை நான் உங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன்!” என நோர்து-டேம் தேவாலய திருத்தந்தை Laurent Stalla-Bourdillon தெரிவித்தார்.