Paristamil Navigation Paristamil advert login

ஆசிய நாடுகளில் பயங்கர சேதத்தை ஏற்படுத்தும் - வங்கா பாபா எச்சரிக்கை

ஆசிய நாடுகளில் பயங்கர சேதத்தை ஏற்படுத்தும் -  வங்கா பாபா எச்சரிக்கை

21 சித்திரை 2025 திங்கள் 10:15 | பார்வைகள் : 234


மூன்று மாதங்களுக்குள் மெகா சுனாமி ஒன்று ஜப்பானைத் தாக்கவிருப்பதாகவும், ஆயிரக்கணக்கானோர் அதனால் உயிரிழப்பார்கள் என்றும் எச்சரித்துள்ளார் ஜப்பானின் வங்கா பாபா என அழைக்கப்படும் பெண்ணொருவர்.

ஜப்பானின் வங்கா பாபா என அழைக்கப்படுபவர் ரியோ டட்சுக்கி (Ryo Tatsuki, 70).

இளவரசி டயானா கார் விபத்தொன்றில் கொல்லப்படுவார் என கணித்திருந்தார் ரியோ, அதேபோல நடந்தது.

2020இல் ஒரு புதிய வைரஸ் பயங்கர உருவாகும் என கணித்திருந்தார் ரியோ, அதேபோல கொரோனாவைரஸ் கோவிட் 19 கொள்ளைநோயை உருவாக்கியது.

இதுபோல பல விடயங்களை துல்லியமாக கணித்த ரியோ, தற்போது, மெகா சுனாமி ஒன்று ஜூலை மாதத்தில் ஜப்பானைத் தாக்கும் என்று கூறியுள்ளார்.

கடல் கொந்தளிப்பதை தான் தன் தரிசனத்தில் பார்த்ததாக தெரிவித்துள்ள ரியோ, கடலுக்கடியில் உள்ள எரிமலை ஒன்று வெடித்து இந்த மெகா சுனாமியை உருவாக்கும் என்றும், அந்த சுனாமி, தைவான் மற்றும் இந்தோனேசியா உட்பட பல ஆசிய நாடுகளில் பயங்கர சேதத்தை ஏற்படுத்தும் என்றும் கூறியுள்ளார்.

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்