பாப்பாண்டவர் பிரான்சிஸின் உடல் மக்கள் பார்வைக்கு!

21 சித்திரை 2025 திங்கள் 13:34 | பார்வைகள் : 457
பன்னிரண்டு ஆண்டுகள் திருத்தந்தையாகப் பணியாற்றிய பிறகு, திருத்தந்தை பிரான்சிஸ், தனது 88வது வயதில், ஏப்ரல் 21 திங்கட்கிழமை காலை காலமானதாக வத்திக்கான் அறிவித்தது.
88 வயதில் காலமான போப்பாண்டவர் பிரான்சிஸின் உடல் அவர் திருத்தந்தையாக தேர்ந்து எடுக்கப்பட்டதிலிருந்து வசித்து வந்த வத்திக்கானில் உள்ள Sainte-Marthe இல்லத்தின் தேவாலயத்தில், இரவு 8 மணிக்கு சவப்பெட்டியில் வைக்கப்படும்.
புதன்கிழமை முதல் புனித பீட்டர்ஸ் பசிலிக்காவில் (la basilique Saint-Pierre) இறையாண்மை கொண்ட போப்பாண்டவரின் உடலை மக்கள் பார்வைக்காக திட்டமிட்டுள்ளதாக வத்திக்கான் அறிவித்துள்ளது.