பயங்கரவாதம் : Yvelines இல் ஒருவர் கைது!!

21 சித்திரை 2025 திங்கள் 17:17 | பார்வைகள் : 588
தொடருந்து ஒன்றில் வெடிகுண்டு வைத்திருப்பதாக அச்சுறுத்த ஒருவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஏப்ரல் 21, திங்கட்கிழமை காலை 9 மணி அளவில் தொடருந்து பயணி ஒருவர் காவல்துறையினரை அழைத்ததை அடுத்து, Yvelines மாவட்டத்தில் உள்ள Achères-Grand-Cormier தொடருந்து நிலையத்தில் வைத்து 56 வயதுடைய ஒருவரைக் கைது செய்துள்ளனர். குறித்த நபர் தொடருந்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக பயணி ஒருவரை அச்சுறுத்தியுள்ளார்.
அதை அடுத்தே அவர் கைது செய்யப்பட்டார். அத்ச்ன்போது அவர் 'அல்லா ஹு அக்பர்' என கோஷமிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. தொடருந்து முழுவதும் வெடிகுண்டு அகற்றும் நிபுணர்கள் தேடுதல் மேற்கொண்டனர். அதன்போது வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.