Mayotte தீவை மீள்கட்டமைக்க மூன்று பில்லியன் யூரோக்களுக்கும் மேல் நிதியுதவி: மக்ரோன் அறிவிப்பு!!

21 சித்திரை 2025 திங்கள் 19:13 | பார்வைகள் : 310
Mayotte தீவுக்கு புனரமைப்பு திட்டமாக ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், 2025 முதல் 2031 வரை 3.2 பில்லியன் யூரோ நிதியை அறிவித்துள்ளார்.
இந்த நிதி, சட்டவிரோத குடியேற்றம், சட்டவிரோத வீட்டுவசதி மற்றும் பாதுகாப்பின்மைக்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்தவும், உள்ளூர் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படும்.
தேசிய மற்றும் ஐரோப்பிய நிதிகளுடன், சர்வதேச நன்கொடையாளர்களையும் இதில் இணைக்க திட்டமிட்டுள்ளார்.
இத்திட்டத்தில், குடியுரிமை வழங்கும் விதிமுறைகளை கடுமையாக்குதல், நாடு திரும்பும் உதவியை விரைவாக்குதல், மற்றும் பாழடைந்த குடியிருப்புகளை அகற்றுதல் போன்ற நடவடிக்கைகள் உள்ளன.
சிடோ புயலுக்கு பிறகு வாக்குறுதி அளிக்கப்பட்ட வட்டியில்லா கடன்கள் விரைவில் கொடுக்கப்படும் என்றும், சிக்குன்குன்யா தடுப்பூசி முகாம் தொடங்கும் என்றும் மக்ரோன் தனது முதல் நாள் சுற்றுப்பயணத்தில் கூறியுள்ளார்.