போப்பாண்டவருக்காக நோர்து-டேம் தேவாலயத்தில் நள்ளிரவு வரை மக்கள் கூட்டம்!!

22 சித்திரை 2025 செவ்வாய் 07:00 | பார்வைகள் : 430
போப்பாண்டவரின் மறைவை அடுத்து, நோர்து-டேம் தேவாலயத்தில் சிறப்பு அஞ்சலி பிரார்த்தனைகள் இடம்பெற்றன. நேற்று நள்ளிரவு வரை மக்கள் கூட்டம் அலைமோதியது.
பாப்பரசர் பிரான்சின் நேற்று ஏப்ரல் 21, திங்கட்கிழமை காலை தனது 88 ஆவது வயதில் மரணமடைந்திருந்தார். அதை அடுத்து அவருக்கான அஞ்சலி பிரார்த்தனைகள் இடம்பெறும் என நோர்து-டேம் தேவாலயம் அறிவித்திருந்தது. நேற்று நண்பகல் 12 மணிக்கு முதலாவது பிரார்த்தனை இடம்பெற்றது.
அதை அடுத்து மாலை 6 மணிக்கு சிறப்பு பிரார்த்தனையும், பின்னர் மாலை 7 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை தொடர்ச்சியான பிரார்த்தனைகளும் இடம்பெற்றன. பல நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு சென்று நள்ளிரவு வரை வழிபாட்டில் ஈடுபட்டனர்.
பின்னர் இன்று செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு மீண்டும் பிரார்த்தனைகள் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.