Cannes திரைப்படவிழா : திகதி அறிவிப்பு!!

22 சித்திரை 2025 செவ்வாய் 10:00 | பார்வைகள் : 247
Cannes சர்வதேச திரைப்பட விழாவின் (Festival de Cannes) 78 ஆவது ஆண்டு விருது விழா இடம்பெறும் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக ஏற்பாட்டுக்குழுவினர் உத்தியோகபூர்வ ‘போஸ்ட்டர்’ ஒன்றை நேற்று ஏப்ரல் 21, திங்கட்கிழமை வெளியிட்டுள்ளனர். இதற்காக 1966 ஆம் ஆண்டு வெளியான Un homme et une femme" திரைப்படத்தின் (ஆங்கிலப்பதிப்பு : A Man and a Woman) காட்சி ஒன்றை வண்ணமாக்கி பயன்படுத்தியுள்ளனர். அத்திரைப்படத்தில் நடித்த நாயகன், நாயகி (Anouk Aimée மற்றும் Jean-Louis Trintignant ) இருவரும் தோன்றும் குறித்த போஸ்ட்டரில் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி வரும் மே மாதம் 13 ஆம் திகதியில் இருந்தூ 24 ஆம் திகதி வரை திரைப்படவிழா இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.