"வாழ்வதற்கு எதுவும் இல்லாத, கோபமாக இருக்கும் விவசாயிகளின் வேதனையை நான் ஆழமாக உணர்கிறேன்": ரீயூனியனில் மக்ரோன்!!

22 சித்திரை 2025 செவ்வாய் 11:25 | பார்வைகள் : 1086
மயோத்திற்கு பிறகு, இம்மானுவேல் மக்ரோன் ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை ரீயூனியன் தீவுக்குச் சென்றடைந்தார்.
கடுமையான வறட்சி மற்றும் Garance புயலால் பாதிக்கப்பட்ட விவசாயத்துறைக்கு, ஜனாதிபதி ஜூன் மாதத்துக்குள் அவசர உதவித் திட்டங்களை அறிவிப்பதாகக் கூறினார். விவசாயிகள் வாழ்வாதாரமின்றி துன்பப்படுகிறார்கள் என்பதை உணர்வதாகவும், அவர்களின் கோபம் நியாயமானது என்றும் அவர் தெரிவித்தார்.
ரியூனியன் தீவில் பரவிய சிகுன்குன்யா வைரஸ் இந்த ஆண்டில் ஆறு உயிரிழப்புகளை ஏற்படுத்தி, சுமார் 100,000 பேரை பாதித்துள்ளது. இது ஒரு முக்கியமான சுகாதாரப் பிரச்சனையாக இருப்பதாக ஜனாதிபதி கூறினார்.
Garance புயலால் 250 மில்லியன் யூரோக்கள் வரை சேதம் ஏற்பட்டுள்ளது; இதில் விவசாய துறையில் 150 மில்லியன் யூரோக்கள் இழப்பு ஏற்பட்டுள்ளது.