Meta நிறுவனம் மீது சுமார் 200 பிரான்ஸ் ஊடகங்கள் வழக்கு தொடர்ந்துள்ளன...

23 சித்திரை 2025 புதன் 12:23 | பார்வைகள் : 2629
ஏப்ரல் 23ஆம் திகதி சுமார் 200 பிரெஞ்சு ஊடக நிறுவனங்கள் Meta நிறுவனம் (Facebook, Instagram) மீது பரிஸ் நகரத்தின் வணிக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளன.
மெட்ரா பயனாளர்களின் தனிப்பட்ட தரவுகளை சட்டவிரோதமாக சேகரித்து, அதைப் பயன்படுத்தி, அவர்களின் தேடுதல் சம்பந்தப்பட்ட விளம்பரங்களை வெளியிட்டதன் மூலம் பிரெஞ்சு ஊடகங்கள் முக்கியமாக டிஜிட்டல் விளம்பர வருமானங்கள் குறைந்துள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் TF1, France Télévisions, Radio France, Le Figaro, Libération, Dailymotion போன்ற முக்கிய ஊடகங்கள் பங்கேற்றுள்ளன.
வழக்கறிஞர்கள் கூறுவதில், மெட்டா மற்றும் கூகுள் சேர்ந்து ஆன்லைன் விளம்பர சந்தையின் 75% மற்றும் அதன் வளர்ச்சியின் 90%ஐ கைப்பற்றியுள்ளனர். இத்தகைய “சட்டவிரோத நடைமுறைகள்” இல்லாவிட்டால், பிரெஞ்சு ஊடகங்களுக்கு அதிக விளம்பர வருமானம் கிடைத்திருக்கும் என அவர்கள் வாதிடுகின்றனர்.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
3