Paristamil Navigation Paristamil advert login

படிப்படியாக மீண்டும் சேவையில் T4

படிப்படியாக மீண்டும்  சேவையில் T4

24 சித்திரை 2025 வியாழன் 23:02 | பார்வைகள் : 3427


கடந்த வெள்ளிக்கிழமை ஒரு பயணிக்கு நிகழ்ந்த கொடூரமான தாக்குதலையடுத்து நிறுத்தப்பட்டிருந்த T4 Tram போக்குவரத்து சேவையானது, வியாழன் நண்பகல் முதல் படிப்படியாக மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக இல்-து-பிரான்ஸ் மொபிலிடி நிறுவனம்( Ile-de-France Mobilités)அறிவித்துள்ளது.

Bondy முதல் Montfermeil மற்றும் Aulnay-sous-Bois வரை செல்லும் டிராம்வே வழித்தடத்தில், தற்போது இரண்டு டிராம்களில் ஒன்று மட்டுமே இயங்குவதால், பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலை, ஏப்ரல் 28-ம் தேதி வரை நீடிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு, எந்தவொரு காரணமுமின்றி 49 வயதான நபரால் சுமார் முப்பதுக்கும் குறைவான வயதுள்ள நபர் சரமாரியாக தாக்கப்பட்டார்.

பாதிக்கப்பட்ட நபர், l’hôpital de La Pitié Salpêtrière மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளதாக அனுமதிக்கப்பட்டு தெரிவித்துள்ளனர்.

புதன்கிழமை அவரது நிலை சற்று மேம்பட்டுள்ளதாகவும், ஆனால் இன்னும் விசாரணைக்கு தகுந்த நிலையில் இல்லையென Bobigny நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த வழித்தடத்தில் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் புதிய ரயில்வே பாதுகாப்பு பிரிவு உருவாக்கப்படும் என அறிவிக்கபட்டுள்ளது.

7 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

  • Ecology

    1

  • Live Link

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்