இலத்திரனியல் காப்புடன் முன்னாள் ஜனாதிபதி.. - Légion d'honneur கெளரவம் பறிக்கப்படுமா..?
.jpg)
25 சித்திரை 2025 வெள்ளி 07:00 | பார்வைகள் : 3042
முன்னாள் ஜனாதிபதி நிக்கோலா சர்கோஷிக்கு தற்போது இலத்திரனியல் காப்பு அணிவிக்கப்பட்டுள்ளது. அவர் எங்கு சென்றாலும் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுவார். இந்நிலையில் அவருக்கு வழங்கப்பட்ட பிரான்சின் மிக உயரிய கெளரவமான Légion d'honneur பட்டத்தை மீளப்பெறுவது தொடர்பில் கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.
நிக்கோலா சர்கோஷி மீதான ’தொலைபேசி ஒட்டுக்கேட்பு’ விவகாரம் கடந்த டிசம்பர் முதல் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. அவர் முறைகேடாக நடந்துகொண்டதை அடுத்து அவருக்கு வழங்கப்பட்ட Légion d'honneur விருது தொடர்பில் கேள்வி எழுப்பட்டு வருகிறது.
இதனை ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் மறுத்துள்ளார். “நீதிமன்ற தீர்ப்பை நான் மதிக்கிறேன். ஆனால் அவருக்கு வழங்கப்பட்ட கெளரவத்தை பறிப்பது ஏற்புடையதல்ல” என அவர் குறிப்பிட்டார்.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
1