சுவிட்சர்லாந்தில் கொள்ளையில் ஈடுபட்ட நான்கு பிரெஞ்சு நபர்கள் கைது!!

25 சித்திரை 2025 வெள்ளி 08:00 | பார்வைகள் : 874
சுவிட்சர்லாந்தில் (Suisse) உள்ள விடுதி ஒன்றில் கொள்ளையில் ஈட்டுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டு நான்கு பிரெஞ்சு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஏப்ரல் 24, நேற்று வியாழக்கிழமை அதிகாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. பிரான்ஸ் சுவிஸ் நாடுகளுக்கிடையிலான எல்லைக் கிராமமான Chavannes-de-Bogis இல் உள்ள விடுதி ஒன்று கொள்ளையிடப்பட்டுள்ளது. நான்கு நபர்கள் இணைந்து வரவேற்பு பகுதிக்குள் நுழைந்து, பணத்தை கொள்ளையிட்டுள்ளனர்.
கொள்ளையர்கள் தப்பிச் சென்ற நிலையில், காவல்துறையினர் அவர்களைக் கைது செய்தனர்.
24 தொடக்கம் 27 வயது வரையுள்ள அவர்கள் நால்வரும் பிரெஞ்சுநபர்கள் என தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்டவர்கள் இருவர் பெண்கள் என தெரிவிக்கப்படுகிறது.