Paristamil Navigation Paristamil advert login

பாடசாலைக்கு சமூகமளிக்காதவர்களின் குடும்பக் கொடுப்பனவுகள் இரத்து!!

பாடசாலைக்கு சமூகமளிக்காதவர்களின் குடும்பக் கொடுப்பனவுகள் இரத்து!!

26 சித்திரை 2025 சனி 10:23 | பார்வைகள் : 4411


Béziers  நகரத்தின் நகரபிதா ரெபேர் மெனார் ((Robert Ménard))  மாணவர்கள் பாடசாலைகளிற்குத் தொடர்ச்சியாக வராது விட்டால், அவர்களது குடும்பக் கொடுப்பனவுகள் (LES ALLOCATIONS FAMILIALES) இரத்துச் செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

« பாடசாலைகளில் 20சதவீதம் முதல் 30 சதவீதம் வரை மாணவர்கள் சமூகமளிக்காமை தொடர்ந்து வருகின்றது»

«கொலேஜ்களில் 30 சதவீத சமூகமளிக்காமை தொடர்கின்றது»

«தொடர்ச்சியாக பாடசாலைக்கு வராமை பெருங்குற்றமாகும்»

«நாம் எவ்வளவு முயற்சி செய்தும் மாணவர்களின் சமூகமளிக்காமையைத் தடுக்க முடியவில்லை»

«அதனால் மாவட்டத் தலைமை ஆணையத்துடன் கலந்தாலோசித்து, CAF உடன் தொடர்புகொண்டு, இவர்களிற்கான கொடுப்பனவுகளை நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளளோம்»

«இதன் மூலம் மாணவர்களின் வரவு அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கின்றோம்»

என நகரபிதா தெரிவித்துள்ளார்.

7 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

  • Ecology

    1

  • Live Link

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்