Paristamil Navigation Paristamil advert login

இன்று அரைக்கம்பத்தில் தேசியக்கொடி!! வெடிக்கும் சர்ச்சை!!

இன்று அரைக்கம்பத்தில் தேசியக்கொடி!! வெடிக்கும் சர்ச்சை!!

26 சித்திரை 2025 சனி 11:13 | பார்வைகள் : 2855


பிரெஞ்சு அரசாங்கத்தின் முடிவுப்படி, போப்பாண்டவர் பிரோன்சுவாவின் இறுதிச் சடங்கு நடக்கும் இன்று சனிக்கிழமை அரசாங்கக் கட்டடங்களில் தேசியக்கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளன.

இது பிரான்சின் கொள்கையான laïcité எனப்படும் மதச்சார்பின்மை மற்றும் தேவாலங்களையும் அரசாங்கத்தினையும் பிரிக்கும் தத்துவத்திற்கு எதிரானது.

தேவாலங்களையும் அரசாங்கத்தினையும் பிரிக்கும் laïcité சட்டம் 1905 கொண்டு வரப்பட்டது இதன் நூற்றாண்டும் 2005 ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது.

இதற்கு இடது சாரிக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் கொம்யூனிசக் கட்சியின் தலைவர்கள் பெரும் எதிர்ப்பபைத் தெரிவித்துள்ளார்கள்.

இது தேசத்தின் கொள்கைகளிற்குப் புறம்பானதும் எதிரானதும் என  Fabien Roussel, Manuel Bompard, Marine Tondelier, போன்ற கட்சித் தலைவர்களும் மேலும் பலரும் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.

ஒரு தேவலாயத் தலைவரிற்காக கொடிகள் இறக்கப்பட்டமை அதிர்ச்சியளிக்கின்றது என்பதற்கு, இது ஒரு அரசதலைவரிற்கான மரியாதை என அரசாங்கம் சப்பைக் கட்டுக் கட்டியுள்ளது. அப்படியானால்  சாவடையும் அனைத்து அரச தலைவர்களிற்கும் பிரெஞ்சுக் கொடி இறக்கப்படதா என்ற கேள்விகள் கடுமையாக எழுந்துள்ளன.

அரசாங்கம் வெறும் மதச்சார்பைக் காட்டியுள்ளது என மிகக் கடுமையாகச் சாடியுள்ளனர்.

இது பெரும் விவாதமாகப் பாராளுமன்றத்தில் சூடுபறக்க உள்ளது.
 

7 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

  • Ecology

    1

  • Live Link

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்