Paristamil Navigation Paristamil advert login

SNCF வேலைநிறுத்தத்துக்கு தடை விதிக்கப்படவேண்டும்! - மக்கள் கருத்து!!

SNCF வேலைநிறுத்தத்துக்கு தடை விதிக்கப்படவேண்டும்! - மக்கள் கருத்து!!

26 சித்திரை 2025 சனி 19:15 | பார்வைகள் : 869


SNCF தொடருந்து நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் வருகின்ற மே முதல் வாரத்தில் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். இந்த வேலை நிறுத்தத்துக்கான ஆதரவுகள் குறித்த கருத்துக்கணிப்பு ஒன்று மேற்கொள்ளப்ப்ட்டுள்ளது.

கருத்துக்கணிப்பில் “மே மாதம் இடம்பெற உள்ள SNCF தொழிலாளர் ஆர்ப்பாட்டத்துக்கு தடை விதிக்கவேண்டுமா?” எனும் கேள்வி எழுப்பப்பட்டது., இதற்கு 35% சதவீதமானவர்கள் வேண்டாம் என கருத்து தெரிவித்துள்ளனர். ஏனைய 65% சதவீதமானவர்கள் “ஆம் தடை விதிக்கவேண்டும்” என தெரிவித்துள்ளனர்.

மே மாதம் 5 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதிவரையான நாட்களில் இந்த வேலை நிறுத்தம் இடம்பெற உள்ளது. இந்த வேலை நிறுத்தத்தினால் பல இலட்சம் மக்கள் பாதிப்படைவார்கள் என தெரிவிக்கப்பட்டது. அதை அடுத்தே CNEWS, Europe 1மற்றும் JDD ஊடகத்துக்கான இந்த கருத்துக்கணிப்பை CSA நிறுவனம் மேற்கொண்டிருந்தது. 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்