ஜூடோ : ஐந்தாவது முறையாக ஐரோப்பிய கிண்ணத்தை தட்டிச் சென்ற பிரெஞ்சு வீராங்கணை!!

26 சித்திரை 2025 சனி 20:51 | பார்வைகள் : 2874
ஜூடோ ஐரோப்பிய கிண்ண போட்டிகளின் இறுதிப்போட்டி இன்று சனிக்கிழமை இடம்பெற்றது. இதில் பிரெஞ்சு வீராங்கணை Romane Dicko வெற்றிவாகை சூடினார்.
இந்த போட்டி ஏப்ரல் 26, இன்று சனிக்கிழமை Montenegro நாட்டில் இடம்பெற்றது. இதில் பிரெஞ்சு அணி சார்பாக போட்டியிட்ட Romane Dicko, இஸ்ரேலைச் சேர்ந்த Raz Hershko எனும் வீராங்கணையை 4-0 எனும் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் ஆனார்.
இது அவருடைய ஐந்தாவது ஜூடோ ஐரோப்பியக் கிண்ணமாகும்.
முன்னதாக Dicko பரிஸ் ஒலிம்பிக் போட்டியில் 78 கிலோ பிரிவு ஜூடோ விளையாட்டில் ஈடுபட்டு வெண்கல பதக்கத்தினை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
1