தீவிரத் தேடுதல் வேட்டை!! வெளியிடப்பட்ட கொலையாளி படம்!!

27 சித்திரை 2025 ஞாயிறு 12:19 | பார்வைகள் : 1571
வெள்ளிக்கிழமை நடந்த பள்ளிவாசல் கொலையாளியைத் தேடும் பணியில் ஜோந்தார்மினர் ஓய்வின்றித் தேடுதல் வேட்டை நடாத்தி வருகின்றனர்.
அடுத்த ஒரு கொலையில் இந்தக் குற்றவாளி ஈடுபடாமல் இருப்பதற்காக அவனைத் தேடும் தீவிர முயற்சி முடுக்கி விடப்பட்டுள்ளது என்று Alès நகரத்தின் அரசதரப்பு சட்டமா அதிபர் அப்தெல் கரிம் கிரினி தெரிவித்துள்ளார்.
இந்தக் கொலையில் ஈடுபட்ட ஒலிவியே ((Olivier H))யினைத் தேடும் பணியில், கடந்த 24 மணிநேரமாக முழு முயற்சியையும் பயன்படுத்தி விசாரணைப்பிரிவினர் தேடிவருவதாகவும், மிக விரைவில் அவன் சிக்கிவிடுவான் என்றும் சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.