இன்று காலை அதிரடியாக 22 பேர் கைது!!

28 சித்திரை 2025 திங்கள் 09:33 | பார்வைகள் : 639
இன்று ஏப்ரல் 28, திங்கட்கிழமை காலை நாட்டின் பல இடங்களில் இருந்து 22 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். சிறைச்சாலைகள் மீது இடம்பெற்ற தாக்குதல்களில் தொடர்புடையவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இல் து பிரான்சுக்குள் பலரும் Lyon, Marseille மற்றும் Bordeaux போன்ற மாவட்டங்களைச் சேர்ந்த சிலரும் என மொத்தமாக 22 பேர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஏப்ரல் 13 ஆம் திகதியில் இருந்து 21 ஆம் திகதிக்குட்பட்ட நாட்களில் 15 தாக்குதல் சம்பவங்கள் நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் இடம்பெற்றன. 22 வாகனங்கள் எரியூட்டப்பட்டிருந்தன.
இத்தாக்குதல்கள் தொடர்பில் தேசிய பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர். மொத்தமாக 200 விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.