Paristamil Navigation Paristamil advert login

அதியுச்சமாகும் வேலையில்லாதோர் தொகை - பத்து வருடங்கள் இல்லாத தொகை!!

அதியுச்சமாகும் வேலையில்லாதோர் தொகை - பத்து வருடங்கள் இல்லாத தொகை!!

28 சித்திரை 2025 திங்கள் 10:12 | பார்வைகள் : 385


2025 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களின் வேலை தேடுவோர் தொகையினை இன்று திங்கட்கிழமை பிரான்சின் தேசிய வேலைவாய்ப்பு மற்றும் வேலையற்றோர் காப்புறுதி (Allocation chômage) வழங்கும் நிறுவனமான France Travail வெளியிட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் பதியப்பபட்டுள்ள வேலைதேடுவோர் தொகையானது, கடந்த பத்து வருடங்களாக இல்லாத அளவு அதியுச்சத் தொகையாகும் (கொரோனாக் காலத்தைத் தவிர்த்து).

அமெரிக்காவின் பொருளாதார யுத்தம், பிரான்சில் பெருமளவு பாதித்து, பல்லாயிரக்கணக்கானவர்களை வேலையற்றோர் ஆக்கியுள்ளது எனவும், 2024 கடைசி மூன்று மாதங்களை விட. 2025 ஜனவரியிலிருந்து வேலையற்றோர் தொகை 3.9 சதவீதத்தால் உயர்ந்துள்ளது எனவும் இந்த அறிக்கை தெரிவிக்கின்றது.
 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்