Paristamil Navigation Paristamil advert login

வெடிகுண்டு அச்சுறுத்தல் : நான்கு பாடசாலைகள் வெளியேற்றம்!!

வெடிகுண்டு அச்சுறுத்தல் : நான்கு பாடசாலைகள் வெளியேற்றம்!!

28 சித்திரை 2025 திங்கள் 12:20 | பார்வைகள் : 4019


இன்று திங்கட்கிழமை காலை நான்கு பாடசாலைகளுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதை அடுத்து, மாணவர்கள் ஆசிரியர்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.

Var மாவட்டத்தில் இச்சம்பவம் ஏப்ரல் 28, இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்றது.

Brignoles நகரில் உள்ள Jean Moulin கல்லூரி,   அதேபகுதியில் உள்ள Gustave Roux மற்றும் Marcel Rivière கல்லூரி அத்தோடு Hyères நகரில் உள்ள  Maintenon லீசே ஆகிய நிலையங்களுக்கு இன்று காலை ஒரே நேரத்தில் வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது.

அங்கு காவல்துறையினர் மற்றும் வெடிகுண்டு அகற்றும் படையினர் குவிக்கப்பட்டு பாடசாலை வளாகம் முழுவதும் தேடப்பட்டது.

அனைத்து மிரட்டல்களும் போலியானது என தெரிவிக்கப்பட்டதை அடுத்து, மீண்டும் காலை 10.30 மணி அளவில் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டன.

மேற்படி தொலைபேசி அச்சுறுத்தல் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

7 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

  • Ecology

    1

  • Live Link

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்