கைதிகள் தங்கள் செலவைச் செலுத்தவேண்டும் - நீதியமைச்சர்!

28 சித்திரை 2025 திங்கள் 21:14 | பார்வைகள் : 430
இன்று பிரான்சின் நீதியமைச்சர் ஜெரால்ட் தர்மனன், அனைத்துச் சிறையதிகாரிகளிற்கும் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில் தான் புதிய சட்டத்திருத்தம் ஒன்றைச் செய்யப்போவதாகவும், அதன்படி பிரான்சில் சிறையிலிருக்கும் கைதிகள், தங்களிற்கான செலவின் ஒரு பகுதியை கைதிகளே செலுத்தவேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
ஒரு நாளைக்கு மட்டும் பிரான்சின் சிறைகளில் உள்ள கைதிகளிற்கான செலவு 10 மில்லியன் யூரோக்களாகும்.
2003 ஆம் ஆண்டு வரை கைதிகள் செலவீனத்தில் பங்கு எடுக்கும் சட்டம் இருந்து வந்துள்ளது. உதாரணத்திற்கு வைத்தியச் செலவு, சிறையிலிருப்பதற்கான செலவு என, சிறையினுள்ளே வேலை செய்தும் வேறு வித்திலும் செலுத்தி வந்துள்ளனர்.
இதை நான் மீண்டும் நடைமுறைப்படுத்தப் போகின்றேன் என்று தொலைக்காட்சிச் செவ்வியிலும் நீதியமைச்சர் தெரிவித்துள்ளார். சிறைத் தாக்கதலில் 25 பேர் கைத செய்யப்பட்டது தொடர்பான செவ்வியில் இதனையும் நீதியமைச்சர் தெரிவித்துள்ளார்.