எரிவாயு கட்டணம் வீழ்ச்சியடைகிறது!!
.jpeg)
29 சித்திரை 2025 செவ்வாய் 08:00 | பார்வைகள் : 558
வரும் மே 1 ஆம் திகதியுடன் எரிவாயு கட்டணம் வீழ்ச்சியடைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஒரு கிலோவாட் மணிநேரத்துக்கான மின் கட்டணம் 6.4% சதவீதத்தால் வீழ்ச்சியடைகிறது. இதனால் €0.12412 யூரோக்களாக உள்ள கட்டணம் €0.1162 யூரோக்களாக குறைவடைய உள்ளது.
சமையல், வெப்பமூட்டி மற்றும் சமையல் - வெந்நீருக்கான எரிவாயு பயன்படுத்துபவர்கள் வருடத்துக்கு €1,667 யூரோக்கள் கட்டணம் வரை செலுத்த்ய நிலையில் இந்த வீழ்ச்சியின் பின்னர் கட்டணம் €1,579 யூரோக்களாக இருக்கும் எனவும்,இதனால் வருடத்துக்கு €88 யூரோக்கள் வரை சேமிக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது.