பல்கலைக் கழகங்களில் பெருகும் இனத்துவேசம் - யூத எதிரப்புவாதம்!!

29 சித்திரை 2025 செவ்வாய் 10:28 | பார்வைகள் : 2789
உயர்கல்வி நிறுவனங்கள் யூத எதிர்ப்புவாதத்தின் மிக முக்கிய தளமாக உள்ளது என, பெண்கள் மற்றும் ஆண்களிற்கான சமஉரிமை அமைச்சகத்தின் ஓரோர் பேர்ஜே (Aurore Bergé) ஒரு ஊடகத்தின் முக்கிய நிகழ்வொன்றில் கூறியுள்ளார்.
«2024-2025 கல்வியாண்டின் முதல் மூன்று மாதங்களிற்குள் மட்டும் பல்கலைக் கழகங்களில் 477 யூத எதிர்ப்பு சம்வங்களும் 496 இனத்துவேச சம்பவங்களும் பதிவாகி உள்ளமை அதிர்ச்சிக்குரியது»
«இதற்கான சட்டங்களையும் தண்டனைகளையும் அரசு முறையாக நிர்ணயிக்க வேண்டும். அதுவே இப்படியான சம்பவங்களைத் தடுக்க உதவும்»
«சில பல்கலைக்கழகங்களில் 'யூத மாணவர்களை வெளியேற்றுங்கள்' என்ற சுவரொட்டிகள் கூட உள்ளகக் கட்டடங்களில் ஒட்டப்பட்டும் உள்ளன என மாணவர்கள் சாட்சியமளித்துள்ளனர்»
ஓரேர் பேர்ஜே, ஒரு கல்வி ஆராய்ச்சிக் குழுவை உருவாக்கி இதற்கான தீர்வை பெற முயற்சித்துள்ளார்.
அவர்களின் அறிக்கை, ஐந்து இனவெறி, மற்றும் யூத எதிர்ப்பு குற்றங்களை பொது குற்றவியல் சட்டத்தில் ஒருங்கிணைக்க பரிந்துரைக்கிறது.
யூத எதிர்ப்பு என்ற சொல்லை சிறப்பாக வரையறுக்கவும், ஆசிரியர் பயிற்சியில் குறிப்பிட்ட தலைப்புகளை அறிமுகப்படுத்தவும், இனவெறி மற்றும் யூத எதிர்ப்பு குறித்த பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை உருவாக்க ஓரேர் பேர்ஜே திட்டமிட்டுள்ளார்.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
1