Paristamil Navigation Paristamil advert login

RSA, chèque énergie, impôts மேலும் பல விடயங்களில் மே 1 முதல் நடைமுறைக்கு வரும் மாற்றங்கள்!!

RSA, chèque énergie, impôts மேலும் பல விடயங்களில் மே 1 முதல் நடைமுறைக்கு வரும் மாற்றங்கள்!!

29 சித்திரை 2025 செவ்வாய் 13:34 | பார்வைகள் : 1256


மே 1 முதல் பிரான்சில் பல பொருளாதார மற்றும் சமூக மாற்றங்கள் நடைமுறைக்கு வருகின்றன. முக்கியமாக, சமூக நல கொடுப்பனவுகள் 1.7% உயர்த்தப்பட்டுள்ளன. இதில் RSA, AAH, Allocations familiales, ASS,AJAP, Prime d'activité போன்றவை அடங்கும்.

வழக்கமாக ஏப்ரல்-மே மாதங்களில் வழங்கப்படும் chèque énergie, இந்த ஆண்டு நவம்பரில் அனுப்பப்படும், ஆனால் அது 2027 மார்ச் 31 வரை பயன்படுத்தலாம். 

இத்துடன், எரிவாயு விலை 5% முதல் 6% வரை குறைக்கப்பட்டுள்ளது, இது சமையல், சுடுதண்ணீர் மற்றும் le chauffage  செலவுகளை குறைக்கும்.

மேலும், 2024 வருமானவரி அறிவிப்புக்கான இறுதி தேதிகள் மாவட்டத்தைக் பொறுத்து மாறுபடுகின்றன; காகித அறிவிப்புக்கு மே 20க்குள் சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைன் அறிவிப்புக்கு மே 22 முதல் ஜூன் 5 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்