Choisy-le-Roi : பல பெண்கள் மீது பாலியல் தாக்குதல்கள் மேற்கொண்ட ஒருவர் கைது!!

29 சித்திரை 2025 செவ்வாய் 18:25 | பார்வைகள் : 669
பூங்கா ஒன்றில் வைத்து பல பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Choisy-le-Roi (Val-de-Marne) நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை மாலை 18 வயதுடைய ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அவர் கடந்த ஏப்ரல் 13 ஆம் திகதி மற்றும் 17 ஆம் திகதி ஆகிய நாட்களில் அங்குள்ள பூங்கா ஒன்றுக்கு வருகை தந்த இரு பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். பெண்களில் ஒருவரை பாலியல் வல்லுறவுக்கும் உட்படுத்தியுள்ளார்.
பின்னர் அவர் வெள்ளிக்கிழமை மாலை கைது செய்யப்பட்டு நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த நபர் ஆபிரிக்க நாடொன்றைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.