Paristamil Navigation Paristamil advert login

பா.ஜ., மாநில தலைவருக்கான போட்டியில் இல்லை: அண்ணாமலை

பா.ஜ., மாநில தலைவருக்கான போட்டியில் இல்லை: அண்ணாமலை

5 சித்திரை 2025 சனி 06:22 | பார்வைகள் : 332


பா.ஜ.,வின் புதிய மாநில தலைவருக்கான போட்டியில் நான் இல்லை,'' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

இல்லை

கோவையில் நிருபர்களைச் சந்தித்த அண்ணாமலை கூறியதாவது: புதிய மாநில தலைவருக்கான போட்டியில் நான் இல்லை. நான் யாரையும் கைகாட்டவில்லை. கூட்டணி தொடர்பாக கருத்தையும் கூற விரும்பவில்லை. கட்சி நன்றாக இருக்க வேண்டும். நல்லவர்கள், நல்ல ஆன்மா இருப்பவர்கள் கட்சி. புண்ணியவர்கள் இருக்கும் கட்சி. உயிரை கொடுத்து கட்சி வளர்த்து இருக்கிறார்கள். எப்போதும் நன்றாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன். புதிய தலைவரை தேர்வு செய்யப்படும் போது நிறைய பேசலாம். புதிய தலைவருக்கான போட்டியில் நான் போட்டியில் இல்லை.

ஏகமனதாக

இங்கு தலைவர்கள் யாரும் போட்டி போடுவது கிடையாது. பா.ஜ.,வில் தலைவருக்கு போட்டி எல்லாம் கிடையாது. எல்லாரும் சேர்ந்து ஒரு தலைவரை தேர்வு செய்வோம். இங்கு போட்டி எங்கிருந்து வந்தது. அதனால் தான் தலைவர் பதவிக்கான போட்டியில் நான் இல்லை என சொல்கிறேன். மற்ற கட்சிகள் போல், 50 பேர் சென்று பதவிக்காக வேட்புமனு நடத்தி ஓட்டு போடுவது போன்று கிடையாது. அனைவரும் சேர்ந்து ஏகமனதோடு, ஒருமனதோடு தலைவரை தேர்வு செய்வோம். அதில் போட்டி எங்கிருந்து வந்தது.

செல்ல மாட்டேன்

என்னுடைய பணி எப்போதும் தொண்டனாக தொடரும். ஊழலுக்கு எதிரான போராட்டம் தொடரும். தமிழகத்தில் நல்லாட்சி கொண்டு வருவதற்கான பணி தொடரும்.ஒரு தொண்டனாக கட்சி சொல்லும் பணியை செய்வேன். இந்த மண்ணை விட்டு செல்ல மாட்டேன். டில்லி சென்றால் ஒரு நாள் இரவு தங்கிவிட்டு மறுநாள் தமிழகம் திரும்பும் ஆள் நான். இந்த மண்ணை விட்ட செல்லமாட்டேன்.

நாடகம் முடிவு

நீட் நாடகம் வெற்றிகரமாக முடிவுக்கு வந்துவிட்டது. ஜனாதிபதி நிராகரித்து திருப்பி அனுப்பி விட்டார். இந்திய மக்களுக்கு, தமிழக குழந்தைகளுக்கு நீட் நல்லது என சட்டசபையில் அளித்த தீர்மானத்தை நிராகரித்து விட்டு, முதல்வருக்கு அதிகாரப்பூர்வமாக கடிதம் அனுப்பிவிட்டார்.

முதல்வர், நீட் நாடகம் அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்துவிட்டது. அவர் புதிய நாடகத்தை துவங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். அனைத்துக்கட்சி கூட்டம் என புதிய நாடகம் நடத்தவார். அனைத்து கட்சிகளை அழைப்பார். முதல்வர் உச்சநீதிமன்றத்திற்கு செல்லட்டும் என சவால்விடுகிறேன். இதற்காக தான் காத்து இருக்கிறேன்.

ஜனாதிபதி நிராகரிக்கவேண்டும் எந்த ஒரு வாய்ப்பும் இருக்கக்கூடாது. இருக்கும் ஒரே வாய்ப்பு உச்சநீதிமன்றம் தான். ஏனென்றால் நீட் வந்ததே உச்சநீதிமன்றத்தினால் தான். 8 ம் தேதி கூட்டத்தில் கட்சிகள், சீனா, ஜப்பான் போகலாம் என பேசுவார்கள்.

தைரியம் இருந்தால் சுப்ரீம் கோர்ட் போங்கள். அங்கு தள்ளுபடி ஆகி வரட்டும். குழந்தைகளுக்கு ஒரே மனநிலையோடு படிக்க ஆரம்பிப்பார்கள். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்