Paristamil Navigation Paristamil advert login

‘கூலி’ படம் எப்போது ரிலீஸ் தெரியுமா?

‘கூலி’ படம் எப்போது ரிலீஸ் தெரியுமா?

4 சித்திரை 2025 வெள்ளி 15:43 | பார்வைகள் : 297


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த "கூலி" திரைப்படத்தின் முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகும் என நேற்றைய சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்த நிலையில், சற்று முன் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது குறித்த புதிய போஸ்டரும் வெளியாகியுள்ள நிலையில், அந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள "கூலி" திரைப்படம் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாளில் ரிலீஸ் ஆகுவதால் சுதந்திர தினம் உள்பட நான்கு நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கும் என்றும், அது மட்டுமின்றி வேறு எந்த பெரிய படமும் அந்த நாளில் ரிலீஸ் ஆகவில்லை என்பதால் சோலோ ரிலீஸ் ஆகும் என்றும் கூறப்படுகிறது.

மேலும், இந்த படத்தில் அமீர்கான், நாகார்ஜுனா, பகத் பாசில் என பான் இந்திய நடிகர்கள் நடித்துள்ளதால், மிகப்பெரிய அளவில் இந்தியா முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகும் என்றும், இந்த படம் தமிழ் திரையுலகில் அதிகபட்ச வசூலை பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே, ரஜினிகாந்த் நடித்த "ஜெயிலர்" திரைப்படம் தான் இதுவரை தமிழ் சினிமாவில் அதிக வசூல் செய்த நிலையில், அந்த வசூலை "கூலி" திரைப்படம் முறியடிக்கும் என்றும் கூறப்படுகிறது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்