போதைப்பொருள் புழக்கத்தால் பாடசாலைகளை மூடுவதா - மக்கள் கொந்தளிப்பு!!

4 சித்திரை 2025 வெள்ளி 21:36 | பார்வைகள் : 552
அருகில் போதைப்பொருள் விநியோகம் இருப்பதால் பாடசாலைகளை மூடுவது முறையற்றது என 75 சதவீத மக்கள் கோபத்துடன் தெரிவித்துள்ளனர்.
புள்ளிவிபர நிறுவனமான CSA பல ஊடகங்களிற்காக செய்த கருத்துக்கணிப்பில் 75 சதவீத மக்கள் மேற்கண்ட தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி உள்ளனர்
.
சன் துவானில் (Saint-Ouen - Seine-Saint-Denis உள்ள எமில் சோலா (Emile-Zola) மழலைகள் பாடசாலையின் நான்கு வகுப்புகளும் அதன் நித்திரை அறையும் (dortoir) இடம் மாற்றம் செய்வதற்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர். இதற்கு அருகாமையில் போதைப்பொருள் விற்பனை நடப்பதோடு அல்லாமல், மழலைகள் பாடசாலையில் பிள்ளைகள் விளையாடும் திடலிலும், பல தடவைகள் போதைப்பொருள் சரைகள் காணப்பட்டமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஒரு மழலை அறியாமல் அதை உட்கொண்டால் மரணம் சம்பவிக்கும் ஆபத்து உள்ளமையால், இந்தப் பாடசாலையை இடம் மாற்ற முழுச் சம்மதம் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் ஒவ்வொரு போதைப்பொருள் விநியோகங்களினாலும் பாடசாலைகள் மூடப்படுவதும், இடம் மாற்றம் செய்வதும், தொடரக்கூடாது என்றே மக்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
பாடசாலைகளை இடம் மாற்றாமல், போதைப்பொருள் விற்பனையாளர்களைக் கைது செய்து, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்னபதே மக்கள் கருத்தாக உள்ளது.