"பிரான்ஸ் அதைச் செய்யாது": பெல்ஜியப் பிரதமர்

5 சித்திரை 2025 சனி 05:26 | பார்வைகள் : 1122
காசா பகுதியில் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benyamin Netanyahou) கைது வாரண்டிற்கு உட்பட்டவர். கோட்பாட்டளவில், அனைத்து ஐ.சி.சி உறுப்பு நாடுகளும், அவர் தங்கள் எல்லைக்குள் கால் வைத்தால் அவரைக் கைது செய்ய வேண்டும்.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) கைது வாரண்ட் இருந்தபோதிலும் , பெஞ்சமின் நெதன்யாகு பெல்ஜியத்திற்குச் சென்றால், "ரியல் பாலிடிக்" என்ற பெயரில் அவர் கைது செய்யப்பட மாட்டார் என்று பெல்ஜியப் பிரதமர் பார்ட் டி வெவர் (Bart De Wever) வெள்ளிக்கிழமை அறிவித்து சர்ச்சையைத் தூண்டினார் .
பெஞ்சமின் நெதன்யாகு ஐரோப்பிய எல்லைக்குள் இருந்தால் அவரைக் கைது செய்யும் எந்த ஐரோப்பிய நாடும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. உதாரணமாக, பிரான்ஸ் பெஞ்சமின் நெதன்யாகுவை கைது செய்யாது என குறிப்பிட்டு "நாங்களும் அப்படிச் செய்ய மாட்டோம்" என்று நான் நினைக்கிறேன்," என்று பெல்ஜியப் பிரதமர் கூறினார்.