Paristamil Navigation Paristamil advert login

பா-து-கலே : 115 அகதிகள் கடலில் இருந்து மீட்பு!!

பா-து-கலே : 115 அகதிகள் கடலில் இருந்து மீட்பு!!

5 சித்திரை 2025 சனி 05:33 | பார்வைகள் : 508


பிரான்சில் இருந்து பிரித்தானியா நோக்கி படகில் பயணித்த 115 அகதிகள் கடலில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.

ஏப்ரல் 3 ஆம் திகதி இரவு இந்த மீட்புப்பணி இடம்பெற்றது. Wimereux (Pas-de-Calais) கடற்கரையில் இருந்து அகதிகள் படகு இரண்டு அடுத்தடுத்து புறப்பட்டுள்ளன. முதலாவது படகில் 66 அகதிகள் பயணித்துள்ளனர். இரண்டாவது படகில் 49 பேர் பயணித்துள்ளனர். அப்படகுகளை தடுத்து நிறுத்திய கடற்படையினர் அகதிகளை பாதுகாப்பாக மீட்டனர்.

கடந்த 2024 ஆம் ஆண்டில் 78 அகதிகள் கடலில் மூழ்கி பலியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்