டிரில்லியன் டாலர் பொருளாதாரம் நோக்கி பயணம்; முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

5 சித்திரை 2025 சனி 06:29 | பார்வைகள் : 139
ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை நோக்கி விரைவாக பயணிக்கிறோம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை: 9.69 சதவீத வளர்ச்சியுடன் தமிழகம் இந்தியாவிலேயே மிக அதிக விகித வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியில் தொடர்ந்து கவனம் செலுத்தி சாதனை படைத்து உள்ளோம்.
ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர், பொருளாதார இலக்கை நோக்கி வலிமையோடும் உறுதியோடும் விரைந்து கொண்டிருக்கிறோம். நிலையான நிர்வாகம், தெளிவான தொலைநோக்கை கொண்டு மக்களின் எதிர்காலத்தை திராவிட மாடல் வடிவமைத்து வருகிறது. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.