மெரீன் லு பென்னுக்கு ஆதரவாக டொனால்ட் ட்ரம்ப் சர்ச்சை கருத்து!!

6 சித்திரை 2025 ஞாயிறு 10:54 | பார்வைகள் : 2620
அரசியல் கட்சித் தலைவர் மரீன் லு பென்னுக்கு ஆதரவாக அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கருத்து வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று தெரிவிக்கையில் எனக்கு மரீன் லு பென்னை தெரியாது. ஆனால் அவரது உழைப்பை நான் பாராட்டுகிறேன் எனவும் அவரை இவ்வழக்கில் இருந்து விடுதலை செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். அவரது இந்த கருத்து பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. ஒரு நாட்டின் ஜனாதிபதி மற்றொரு நாட்டு நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கருத்து பேசியிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது போன்ற கருத்துக்கள் இணையவெளியில் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், பிரெஞ்சு பிரதமர் பிரான்சுவா பெய்ரூ இக்கருத்து குறித்து தெரிவிக்கையில், மனித உரிமைகள், சட்டங்கள் தனி ஒரு நபருக்கு சொந்தமாக இருக்கவேண்டும் எனும் எண்ணத்தின் வெளிப்பாடு தான் இந்த கருத்து என கண்டித்துள்ளார்.