ரஷ்யா அமைதியை விரும்பாவிட்டால் கடுமையான நடவடிக்கை எடுப்போம்! - ஜனாதிபதி மக்ரோன் சூளுரை!!

6 சித்திரை 2025 ஞாயிறு 17:00 | பார்வைகள் : 2224
சமாதான உடன்படிக்கைகளை ரஷ்யா தொடர்ச்சியாக நிராகரித்து வருகிறது. இந்நிலையில், இதே நிலை தொடர்ந்தால் கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டி நேரும் என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் எச்சரித்துள்ளார்.
இன்று ஏப்ரல் 6, ஞாயிற்றுக்கிழமை இரஷ்யா மீண்டும் யுக்ரேன் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளது. போர் நிறுத்த மற்றும் அமைதி உடன்படிக்கையை மீறி ரஷ்யா இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளது. தலைநகர் கீவ்வுக்கு அருகே உள்ள பல நகரங்கள் மீது இத்தாக்குதல்கள் பதிவாகியுள்ளன. இந்நிலையில், X சமூகவலைத்தளத்தில் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் இன்று மிக காரசாரமாக ரஷ்யாவை விமர்ச்சித்தார்.
“ரஷ்யா தொடர்ந்தும் அமைதி உடன்படிக்கையை மீறு தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. சமாதானத்தை ரஷ்யா விரும்பாவிட்டால் ‘கடுமையான நடவடிக்கை’ எடுக்கப்படும் என அவர் எச்சரிதார். பொதுமக்கள் மீதும் சிறுவர்கள் மீதும் ரஷ்யா தாக்குதல் மேற்கொள்கிறது.
அமெரிக்காவின் சமாதான உடன்படிக்கையை யுக்ரேன் ஏற்றுக்கொண்டுள்ளது. ஆனால் ரஷ்யா அதனை ஏற்க மறுக்கிறது. மிக கடுமையான விளைவுகளை ரஷ்யா சந்திக்கும் எனவும் எச்சரித்தார்.