Paristamil Navigation Paristamil advert login

Jules et Jim - ஒரு முக்கோண காதல் கதை!

Jules et Jim - ஒரு முக்கோண காதல் கதை!

26 மார்கழி 2016 திங்கள் 10:30 | பார்வைகள் : 19619


பிரெஞ்சு தேசம் 'ஹொலிவுட்' போன்று பிரம்மாண்டமான திரைப்படங்களை தயாரிப்பது இல்லை என்றாலும், மிக தரமான திரைப்படங்கள் தயாரிப்பதை ஒரு போதும் கை விடுவதில்லை!! 'சிறந்த 100 உலக திரைப்படங்கள்' பட்டியலில் இடம்பிடித்த Jules et Jim திரைப்படம் குறித்து சில தகவல்கள் பார்க்கலாம்! 
 
பிரெஞ்சு எழுத்தாளர் Henri-Pierre Roché எழுதிய Jules et Jim நாவலை அதே பெயரில் திரைப்படமாக எடுத்தார் இயக்குனர் François Truffaut.  அவரே திரைக்கதை அமைத்தும், தயாரித்தும் இருந்தார். எத்தனையோ காதல் கதை போல் இதுவும் ஒரு 'முக்கோண' காதல் கதை தான். ஆனால் இயக்குனர் அதை திரையில் வடித்த விதம்... ரசிகர்களை கட்டிப்போட வைத்தது. 
 
1962 ஆம் ஆண்டு ஜனவரியில் வெளியான இத்திரைப்படம், அதே ஆண்டின் கேன்ஸ் திரைப்பட விழாவில் Grand Prix விருதை தட்டிச்சென்றது. கடந்த 2010ஆம் ஆண்டு, the Empire magazine வெளியிட்ட, 'உலகின் தலைசிறந்த 100 திரைப்படங்கள்' பட்டியலில் 46 வது இடத்தை பிடித்துக்கொண்டது இந்த Jules et Jim!
 
இத்திரைப்படத்துக்கு பின்னணி இசையை Georges Delerue வழங்கியிருந்தார். 'சிறந்த 10 திரைப்படங்களின் பின்னணி இசை' பட்டியல் டைம்ஸ் பத்திரிகையால் வெளியிட்டிருந்தது. அந்த பட்டியலில் மறக்காமல் இத்திரைப்படத்துக்காக இடம்பிடித்திருந்தார் Georges Delerue !! 
 
பட்டங்கள்... பதங்களை ஓரம் கட்டிவிட்டு.. திரைப்படத்தை  நிச்சயம் ஒருதடவை பார்த்துவிடுங்கள். அமெரிக்க பேராசியர் Stephen Hawking 'தனக்கு மிகவும் பிடித்த திரைப்படம்' என குறிப்பிட்டுள்ளார்!! 
 
 
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்