Paristamil Navigation Paristamil advert login

2026 பட்ஜெட் சுலபமானதாக இருக்காது : நிதி அமைச்சர் Amélie de Montchalin

2026 பட்ஜெட் சுலபமானதாக இருக்காது : நிதி அமைச்சர் Amélie de Montchalin

7 சித்திரை 2025 திங்கள் 13:48 | பார்வைகள் : 637


டிரம்ப் அறிவித்த மிகப்பெரிய வரிகளால் அடுத்த பட்ஜெட்டில் விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் . 2026 பட்ஜெட் வெளிப்படையான ஒரு வசதியான பட்ஜெட்டாக இருக்காது  என்று நிதி அமைச்சர் Amélie de Montchalin இன்று பொருளாதார மற்றும் நிதி பத்திரிகையாளர்கள் சங்கம் (Ajef) ஏற்பாடு செய்த கூட்டத்தின் போது எச்சரித்துள்ளார்

"புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் கடன் குறைப்பு முயற்சியை ஒருங்கிணைப்பதற்கான ஒரு பட்ஜெட்டாக இது இருக்கும்" என்று அமைச்சர் அறிவித்தார். ஒவ்வொரு யூரோவும், ஒவ்வொரு செலவும் நியாயப்படுத்தப்பட வேண்டும் என்று அவர் மேலும் கூறினார். மேலும் பாராளுமன்றம் சுமூகமாக பட்ஜெட்டை உருவாக்க விரும்புவதாகக் கூறினார்.

2025 ஆம் ஆண்டில் பொதுப் பற்றாக்குறையை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 5.4% ஆகக் குறைக்கும் அரசாங்கத்தின் நோக்கத்தை அமெலி டி மான்ட்சலின் உறுதிப்படுத்தினார். இது கடந்த ஆண்டு 5.8% ஆகவும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்