டாஸ்மாக் வழக்கில் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை நாடியது ஏன்? கேட்கிறார் இ.பி.எஸ்.,!

7 சித்திரை 2025 திங்கள் 18:11 | பார்வைகள் : 241
டாஸ்மாக் வழக்கை வேறு உயர்நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை நாடியது ஏன்? என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., கேள்வி எழுப்பி உள்ளார்.
சென்னை, சட்டசபை வளாகத்தில் நிருபர்கள் சந்திப்பில் இ.பி.எஸ்., கூறியதாவது:
டாஸ்மாக் விவகாரம் குறித்து சட்டசபையில் பேச வேண்டும். டாஸ்மாக் வழக்கை வேறு மாநிலத்தில் விசாரிக்க வேண்டும் என்று அரசு சொல்வது ஏன்? டாஸ்மாக் அரசு சார்ந்த நிறுவனம் என்பதால் தான் கேள்வி கேட்கிறோம்.
டாஸ்மாக்கில் ரூ.ஆயிரம் கோடி முறைகேடு நடந்துள்ளது என அமலாக்கத்துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. அ.தி.மு.க., ஆட்சியில் அமைச்சர்கள் மீது வழக்கு தொடர்ந்த போது, நாங்கள் வேறு மாநிலத்தில் விசாரிக்க வேண்டுமென்று கேட்டோமா? கச்சத்தீவு யார் ஆட்சியில் தாரை வார்க்கப்பட்டது?
கச்சத்தீவு தி.மு.க., ஆட்சியில் தாரை வார்க்கப்பட்ட, அதை முதல்வர் மறைக்க பார்க்கிறார். கடந்த 4 ஆண்டுகளாக மீனவர்கள் பிரச்னைகளை சந்திக்கவில்லையா? கடந்த 4 ஆண்டுகளாக மீனவர்கள் பிரச்னைகளை சந்திக்கவில்லையா? எதிர்க்கட்சி என்ற முறையில் டாஸ்மாக் ஊழல் குறித்த பேச அனுமதி கேட்டும் அனுமதி மறுக்கிறார்கள்.
டாஸ்மாக் விவகாரத்தில் தி.மு.க., அரசு தவறு செய்துள்ளது நிரூபணம் ஆகியுள்ளது. நமது மாநிலத்தில் வழக்கு நடந்தால் தி.மு.க., செய்த தவறு ஊடகங்களில் வெளியாகும் என அச்சம். இவ்வாறு இ.பி.எஸ்., கூறினார்.
இவ்வளவு கேள்வி கேட்கிறீர்களே!
நிருபர்கள் சந்திப்பில் இ.பி.எஸ்., கூறியதாவது:
இவ்வளவு கேள்வி கேட்கிறீர்களே. இன்றைய தினம் அமைச்சர் நேரு மற்றும் சகோதரர் சார்ந்த நிறுவனங்களில் ரெய்டு நடந்து கொண்டிருக்கிறது. இது குறித்து ஒரு கேள்வியாவது கேட்குறீங்களா, தி.மு.க.,வை சார்ந்த எந்த நிறுவனத்திலாவது இப்படி நடந்த சம்பவம் குறித்து ஒரு கேள்வியாவது, இதுவரைக்கும் கேட்டு இருக்கீங்களா?
நான் பலமுறை உங்கள் முன் தோன்றி, ஊடகத்திற்கும், பத்திரிகைகளுக்கும் பேட்டி கொடுத்து இருக்கேன். ஒருமுறை கூட தி.மு.க., பற்றி கேள்வி கேட்க மறுக்கிறீர்கள். தி.மு.க., தலைவரிடம் போய் கூட கேள்வி கேட்க மறுக்கிறீர்கள்.
இன்றைக்கு முதல்வர் இடம் போய் கூட கேட்க மறுக்கிறீர்கள். துணை முதல்வரிடமும் கேட்க மறுக்கிறீர்கள். நாட்டு மக்களின் பிரச்னை குறித்து, எந்த கேள்வி கேட்டாலும் நான் பதில் தர தயார். இவ்வாறு இ.பி.எஸ்., கூறினார்.