பரிஸ் : கழிவு அழிக்கும் நிலையத்தில் பாரிய தீ!!!

7 சித்திரை 2025 திங்கள் 19:10 | பார்வைகள் : 1070
பரிஸ் 17 ஆம் வட்டாரத்தில் உள்ள கழிவு அகறி அழிக்கும் நிலையம் ஒன்று பாரிய அளவில் தீப்பிடித்து எரிந்துவருகிறது.
இன்று ஏப்ரல் 7, திங்கட்கிழமை மாலை இந்த தீ பரவல் ஏற்பட்டது. அப்பகுதி முழுவதும் பெரும் புகைமண்டலாமாக பல கிலோமீற்றர் தூரத்துக்கு காட்சியளிக்கிறது. தீயணைப்பு படையினர் துரிதமாக தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறித்த கழிவு அழிக்கும் நிலையமானது Saint-Ouen மற்றும் Clicjy-la-Garenne நகரங்களைச் சேர்ந்த 900,000 பேருக்கான நிலையமாக அமைந்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த நிலையம் தற்போது தீப்பிடித்து விளாசி எரிந்து வருகிறது.
மேலதிக விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.